கவர்னர் ஆர்.என்.ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு.. முழு விவரம்....
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து சந்தித்து பேசிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 நாட்களுக்கு முன்பு ரஜினி டெல்லி சென்றிருந்தார் பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பியதும் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது
ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடையே பேசிய ரஜினி காந்த்
ஆளுநருடனான சந்திப்பு மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு எனவும் அவர் வட மாநிலங்களில் இருந்தவர். தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார். தமிழ் மக்களின் நேர்மை, கடுமையான உழைப்பு அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. முக்கியமாக இங்கிருக்கும் ஆன்மிக உணர்வு அவரை மிகவும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்றார்.
மேலும் மறுபடியும் அரசியலுக்கு வரும் திட்டம் உள்ளதா எனக் கேட்டதற்கு, இல்லை எனவும்ஆளுநருடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசியதாகவும் அதனை வெளியில் கூற முடியாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்
Tags: தமிழக செய்திகள்
