ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை - பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் தமிழ்நாடு அரசு!
அட்மின் மீடியா
0
ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குபடுத்துவது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு
இணையவழி சூதாட்டத்துக்கு தடை விதிக்கபது குறித்தும், ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் அதிகளவு பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொருப்பு மாநில அரசுகளிடம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இணையவழி சூதாட்டத்துக்கு தடை விதிக்கபது குறித்தும், ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.homesec@tn.gov.in என்ற இணைய முகவரிக்கு பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் வரும் 12ஆம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.இணையவழி விளையாட்டு பற்றிய நீதியரசர் சந்துரு குழு அளித்த அறிக்கை பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசி தேதி:-
12.08.2022
Tags: தமிழக செய்திகள்