Breaking News

பாதுகாப்பு குறைபாடு உடனே உங்க ஆப்பிள் போனை அப்டேட் பன்னுங்க - நிறுவனம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

iOS எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பரேடிங் சிஸ்டமில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஆப்பிள் பயனாளர்கள் ஆப்பிள் iOS 15.6.1 வர்ஷன் சாப்ட்வேரை உடனடியாக அப்டேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது.



அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள்19.08.2022 அன்று தனது ஆப்பரேடிங் சிஸ்டமில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை பயன்படுத்தி ஹேக்கர்கள், ஐபோன், ஐபேட், மேக் உள்ளிட்ட கருவிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட ஆப்பிள் பயனாளர்கள் உடனடியாக தங்கள் சிஸ்டமை அப்டேட் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த குறைபாடு ஆப்பிளின் SAFARI பிரவுசர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களும் இந்த குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

பாதுகாப்பு அம்சத்திற்குப் பெயர் போன ஆப்பில் மொபைல்களிலேயே பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது, பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் ஆப்பிள் போனை அப்டேட் செய்வது எப்படி:-

1. Go to Settings 

2. General, then tap Software Update.

3.If you see software update options available

4.Tap Install Now. 

5.If you see Download and Install instead, tap it to download the update, enter your passcode, then tap Install Now. 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback