Breaking News

சிறப்பாக வாழ அமெரிக்கா வருகின்ற இந்தியர்களை வெறுக்கின்றேன் என கூறி இந்திய பெண்களை தாக்கிய அமெரிக்க பெண் கைது- வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

அமெரிக்காவின் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கடந்த புதன்கிழமை அன்று அங்கு உள்ள ஒரு உணவு விடுதியில் இருந்து இரவு உணவை முடித்து விட்டு வானகத்தில் புறப்பட தயாராக இருந்த இந்திய பெண்கள் மீது அமெரிக்க பெண் ஒருவர் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.




வைரல் ஆகும் அந்த வீடியோவில் நான் எங்கு சென்றாலும், அங்கு இந்தியர்கள் இருக்கிறார்கள். இந்தியா வாழ்வதற்கு நன்றாக இருந்தால் ஏன் இங்கு வருகிறீர்கள்? இந்தியர்களாகிய உங்களை நான் வெறுக்கிறேன். சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக அமெரிக்கா வருகின்றனர் என்று உரத்த குரலில் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுகிறார். நிறவெறியை தூண்டும் வகையில் அவர் பேசிய பேச்சுகள் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.

அதனை  தொடர்ந்து இந்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது  பிளானோ பகுதியை சேர்ந்த  பிளானோ எஸ்மரால்டா அப்டன் என கண்டறிந்த போலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=MyiwXu6jLBY&t=1s

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback