விரைவில் இ-பாஸ்போர்ட் அறிமுகம்!! மத்திய அரசு
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அவுசஃப் சயீத் நேற்று செய்தியாளர் கூட்டத்தில், இ-பாஸ்போர்ட்கள் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படும் என்று கூறினார்.
இ-பாஸ்போர்ட்கள் மூலம், போலி பாஸ்போர்ட்டுகளை குறைத்து, பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் அவற்றை சேதப்படுத்தாததாக மாற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றும் ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களைப் பொறுத்தவரை, இ-பாஸ்போர்ட்டுக்கு மாறுவது கட்டாயமாக இருக்காது. இருப்பினும், அவர்கள் விரும்பினால், அவர்கள் விண்ணப்பித்து பாஸ்போர்ட்டை இ-பாஸ்போர்ட்டாக புதுப்பித்துக்கொள்ளலாம் என்று சயீத் கூறினார்.
இ-பாஸ்போர்ட்டின் சிறப்பு அம்சங்கள்!
இ-பாஸ்போர்ட் (E-Passport) என்பது சாதாரண பாஸ்போர்ட்டைப் போலவே இருக்கும், ஆனால் டிரைவிங் லைசென்ஸ்,ஏடி எம் கார்டில் உள்ளதைப் போன்ற சிப் இ- பாஸ்போர்ட்டிலும் காணப்படும்.
இந்த சிப்பில், பயணிகளின் முழுமையான தகவல்கலுடன் பயோமெட்ரிக் தரவுகளும் இருக்கும். பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பிற தகவல்கள் இந்த மைக்ரோசிப்பில் சேமிக்கப்படும். இந்த சிப் மூலம் இமிகிரேஷன் கவுன்டரில் பயணிகளின் சரிபார்ப்பு பணி விரைவாக நடப்பதோடு, போலி பாஸ்போர்ட் பிரச்சனை ஒழியும் என்பது சிறப்பு.
பல நாடுகளில் இந்த பாஸ்போர்ட் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இ-பாஸ்போர்ட்டை சில நொடிகளில் ஸ்கேன் செய்துவிடலாம் என்பதால் நீண்ட வரிசைகள் இல்லை
போலி பாஸ்போர்ட்டுகளை உருவாக்குவதை தடுக்கிறது
Tags: தமிழக செய்திகள்
