Breaking News

வாட்சப் க்ரூப்களில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் வசதி அறிமுகம்

அட்மின் மீடியா
0

வாட்ஸப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். கடந்த 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டது.  இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கினார்கள்




அதன் பின்பு பயனாளர்களை கவர வாட்ஸப் நிறுவனம் அவ்வபோது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் வாட்சப் க்ரூப்களில் இருந்து மற்றவர்களுக்கு தெரியாமல் வெளியேறும் வசதி

ஆன்லைன் இருப்பை சிலருக்கு மட்டும் தெரியப்படுத்தும் வசதி 

ஒரு முறை மட்டும் காணும்' மெஸேஜ்களை Screenshot எடுக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு உள்பட பல புதிய அம்சம்கள் வாட்சப்பில் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

சமீபத்தில் Delete For Everyone என்ற ஆப்சனுக்கான கால அவகாசத்தை இரண்டு மணி நேரத்தில் இருந்து இரண்டு நாட்கள் மற்றும் 12 மணி நேரமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது



Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback