Breaking News

தமிழகத்தில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கு நேற்று 22.08.2022 நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

வனப்பகுதிகளில் 506 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த அந்நிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அந்நிய மரங்கள் அகற்றும் பணியை காகித நிறுவனத்திடம் ஒப்படைப்பது பற்றி முடிவெடுக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. எனவே, அரசுக்கு அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை செப்.5 க்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback