பிரியாணி ,இறைச்சி கடைகளை மூட பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்ற சிவகாஞ்சி போலீஸ் முழு விவரம்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பிரியாணி கடைகளை மூட வேண்டும் என பிறப்பித்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சிவகாஞ்சி போலீசார் இந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் வருகிற 31-ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இருப்பதாலும், செப்டம்பர் 2,4 ஆகிய தேதிகளில் சிலைகள் கரைக்கப்பட உள்ளது.
எனவே செங்கழுநீரோடை வீதி மற்றும் சங்கரமடம் அருகில் உள்ள இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடைகளை மேற்கண்ட தினங்களில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டி மேற்கண்ட இருதினங்களுக்கு தங்களது கடையை மூடி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல்துறை சார்பில் கேட்டு கொள்கிறோம் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்போது வாபஸ் பெறபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
சிவகாஞ்சி போலீசார் இந்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது
Tags: தமிழக செய்திகள்