Breaking News

இனி மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை பதிவாளரே ரத்து செய்யலாம்- சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் மோசடி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதா கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.



பதிவுச்சட்ட விதிகளில் 22ஏமற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்த பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும். அதற்காக பதில் பெறப்பட்டால், அதை கருத்தில் கொண்டு பதிவாளர் ஆவணப்பதிவை ரத்து செய்யலாம்.

இந்த மசோதா, ஆளுநர் மூலம் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், மோசடி பதிவுகளை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரமளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதை யடுத்து, இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback