வீடு, கடைகளுக்கு சிசிடிவி ஏன் முக்கியமானது என நடிகர் விக்ரம் விளக்கும் வீடியோ
நாளுக்கு நாள் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் வணிக நிறுவனங்களில் நூதன முறையில் திருட்டு சம்பவங்களும் நடந்து வருவதாக புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது.
பலவகையான குற்றங்கள் அசம்பாவிதங்கள் மற்றும் வாகன விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்கு சிசிடிவி கேமரா காட்சிகள் பெரிதும் உதவுகின்றது. அதேபோல் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கவும் சிசிடிவி கேமராக்களின் பயன்படுகின்றது
மேலும் முக்கிய கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களிலும் செயின் பறிப்பு வழிப்பறி ஆகிய சம்பவங்களிலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று சொன்னால் மிகையாகாது. இக்காலகட்டத்தில் நமது வீடு மற்றும் கடைக்கு அவசியமான சாதனம் சிசிடிவி ஆகும்
ஆகவே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விக்ரம் நடிப்பில் வீடியோ வெளிவந்துள்ளது
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ