Breaking News

காங்கிரசில் இருந்து விலகினார் குலாம் நபி ஆசாத் -ராகுல் காந்தியை கடுமையாக தாக்கி விமர்சனம்

அட்மின் மீடியா
0

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.



கடந்த 1973-ம் ஆண்டு காங்கிரஸ் இணைந்த குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட விலகல் கடிதத்தை எழுதி கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிவைத்துள்ளார். அதில் ராகுல் காந்தியால் கட்சி வளரவில்லை கட்சி பெரிய அளவில் சீரழிந்துவிட்டது. மீட்க முடியாத அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. 

இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒருவர் நூலால் இயக்கப்படும் பொம்மையைப் போலவே இருக்க முடியும். தேசிய அளவில் நமக்கான அரசியல் வெளியை பாஜகவுக்கும் மாநில அளவில் வட்டாரக் கட்சிகளுக்கும் விட்டுக்கொடுத்துவிட்டோம். சீரியசாக இல்லாத தனிநபர் ஒருவர் கையில் கட்சியின் தலைமை கடந்த 8 ஆண்டுகளாக ஒப்படைக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம். கட்சித் தேர்தல் மொத்தமும் கேலிக்கூத்தாகிவிட்டது.என அதில் குறிப்பிட்டுள்ளார்.

2014-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கும், ஆட்சியை இழந்ததற்கும் ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே முக்கிய காரணம் என காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் குற்றசாட்டியுள்ளார். காங்கிரஸில் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் அல்லது அவரது உதவியாளர்களால் எடுக்கப்படுவதாகவும், காங்கிரஸில் இருந்த கலந்தாலோசனை வழிமுறையை ராகுல் கணத்தில் முற்றிலும் அளித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback