Breaking News

தமிழக அரசின் அர்ச்சகர் நியமனம் செல்லும் -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

அட்மின் மீடியா
0

ஆகம விதிப்படி அரசு நியமித்துள்ள அர்ச்சகர் நியமனம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை பணி புதிய விதிகள் 2020-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. அதில்,18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது18 வயது முதல் 35வயது வரையில், இருப்பவர்கள், ஒருவருட பயிற்சி முடித்தவர்கள் அர்ச்சர்கர்களாக, பூசாரிகளாக அந்தந்த கோவில் ஆகம விதிப்படி நியமிக்கலாம் என உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதனை எதிர்த்து , சென்னை உயர்நீதிமன்றத்தில், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்கைத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று, தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் எனவும், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டதுடன், எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன என்பதைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback