Breaking News

வேலை தேடும் இளைஞர்களே காஞ்சிபுரத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

அட்மின் மீடியா
0

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.kanchipuramஇம்முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனித வள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். 


அது சமயம் பட்டதாரிகள் (பொறியியல் உட்பட ) , டிப்ளமோ, ஐடிஐ, 12-வது மற்றும் 10-ஆம் வகுப்பு படித்தவர்கள், ஆய்வக உதவியாளர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் மேற்கண்ட நாளில் அதாவது 12.8.22 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும், மேலும் விபரங்களுக்கு 044 27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்து பயன்பெறுமாறு, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Give Us Your Feedback