நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்
அட்மின் மீடியா
0
நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்
ஞானவாபி மசூதி மதவழிபாட்டு தலம் தொடர்பாக மே மாதம் தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் பாஜக செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா இஸ்லாமியர்களின் இறைதூதர் நபி ஸல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்
நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நுபுர் சர்மா மீது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பல்வேறு மாநிலங்களில் தன் மீது பதியப்பட்டுள்ள 10 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து அதை ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டுமென நுபுர் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நுபுர் சர்மா மீது பதியபட்ட 10 வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றியுள்ளது.
மேலும், இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லி போலீஸ் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. .
Tags: இந்திய செய்திகள்
