Breaking News

கிராமங்களில் கோவில் திருவிழா நடத்த போலீசார் அனுமதி தேவையில்லை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில், கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சீனி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா எந்த வித பிரச்சனையும் இன்று வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் இந்தாண்டிற்கான திருவிழா நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியதாகவும், ஆனால் போலீசார் இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை.

ஆகவே திருவிழாவை நடத்த உரிய அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேசமயம்

கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருந்தால் மேலும் ஸ்பீக்கர்கள் வைக்கவும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதும். இந்த வழக்கை பொறுத்தவரை கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். எனவே திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி இந்த வழக்கை முடித்து வைத்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback