Breaking News

தலாக் என்பதும் முத்தல்லாக்கும் ஒன்றல்ல: உச்சநீதிமன்றம்

அட்மின் மீடியா
0

இஸ்லாமில் தலாக் நடைமுறை:-

இஸ்லாமில் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற கணவருக்கு தலாக் என்ற நடைமுறையும் அதேபோல்  கணவரிடம் இருந்து விவாகரத்து பெற மனைவிக்கு குலா என்ற நடைமுறையும் உள்ளது

மேலும் அந்த தலாக்கிற்க்கான நடைமுறையையும் குரான் வகுத்துள்ளது. அதன் படி ஓர் கணவர் தனது மனைவியுடன் வாழ விரும்பவில்லை என்றால் அவர் தனது மனைவிக்கு தலாக் கூறலாம். இதற்க்கு தலாக்-இ-ஹசன் என்று பெயர்

முதல் தலாக்கிற்க்கும் அடுத்த தலாக்கிற்க்கும் 1 மாத இடைவெளி அவசியம் ஆகும். அதே போல் தொடா்ந்து மூன்று மாதங்கள் அறிவிக்கப்படும் தலாக்-இ-ஹசனின்போது, மூன்றாவது மாத அறிவிப்பில் இருவரும் சோ்ந்து வாழ விரும்பினால் இரண்டு மாதங்களாக அறிவிக்கப்பட்ட தலாக் செல்லாததாகிவிடும்.



குலா என்றால் என்ன?

மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும்.

கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.

விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

இந்த குலா முறை பற்றி முஸ்லிம் பெண்கள் கணவரை விவாகரத்து செய்யும் 'குலா' முறை ஆகும்

முத்தல்லாக்:-

இஸ்லாத்தில் இல்லாத ஓர் நடைமுறை இந்த முத்தலாக் ஆகும். அதாவது முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆண்கள், மூன்று முறை தலாக் கூறி, மனைவியை விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக, மத்திய அரசு சட்டத் திருத்தம் மேற்கொண்டது. இதையடுத்து, முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வந்தது. அதையும் மீறி, முத்தலாக் வாயிலாக விவாகரத்து பெறுபவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தலாக் முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பெனாசிர் ஹீனா, வழக்கறிஞர் அஷ்வனி குமார் துபே மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்

முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை மாதத்துக்கு ஒரு முறை வீதம் 3 மாதங்களுக்கு தலாக் (தலாக்-இ-ஹசன்) எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது. இதன்படி எனது கணவர் என்னை விவாகரத்து செய்தார். எனது குடும்பத்தினர் வரதட்சணை கொடுக்க முடியாததே இதற்குக் காரணம். மேலும் எனது கணவரின் குடும்பத்தினர் என்னை அடித்து துன்புறுத்தினர். இதுகுறித்து டெல்லி காவல் ஆணையரிடம் புகார் செய்தேன். எனினும், ஷரியத் சட்டப்படியே எனது கணவர் விவாகரத்து செய்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

முஸ்லிம்கள் தங்கள் மனைவியை தலாக் எனக் கூறி விவாகரத்து செய்வதற்கு முஸ்லிம் தனிநபர் சட்டம், 1937, அனுமதி வழங்கியிருக்கிறது. இது தவறானது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14, 15, 21, 25 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. மேலும் முத்தலாக் சட்டம், அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தலாக் - இ - ஹசன் நடைமுறையை கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற ஒருதலைப்பட்சமான, நீதிக்கும், அரசியலமைப்புக்கும் புறம்பான அனைத்து விதமான தலாக் நடைமுறைகளும் ஒழிக்கப்பட வேண்டும்

எனவே, தலாக் நடைமுறையை ரத்து செய்வதுடன் சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும். அத்துடன் அனைவருக்கும் ஒரே மாதிரியான, நடுநிலையான விவாகரத்து விதிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். என அதில் கூறியிருந்தார்

வழக்கு விசாரனை:-

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில்,நேற்று 16.08.2022 விசாரணைக்கு வந்தது. அப்போது, 

இந்த தலாக் - இ - ஹசன் நடைமுறை, முத்தலாக் போன்றது அல்ல.பெண்கள் விவாகரத்து கோருவதற்கு, 'குலா' என்ற நடைமுறை உள்ளது.தலாக் இ ஹசனும் அப்படிப்பட்டது தான். 

தம்பதிகள் கருத்து வேறுபாட்டால் இணைந்து வாழ விருப்பமில்லை என்று கூறினால் நீதிமன்றம் வாயிலாகவும் விவாகரத்து வழங்கப்படுகிறது. எனவே, தலாக் இ ஹசன் நடைமுறையை முழுமையாக முறையற்றது என கூறி விட முடியாது,இந்த விவகாரத்தில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த விவகாரம், வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடக் கூடாது.

மேலும் இந்த வழக்கில் மனுதாரரிடம் கருத்துப் பெற வேண்டும் என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மேலும் விரிவான தகவலுக்கு:-

https://www.barandbench.com/news/supreme-court-bench-justices-dy-chandrachud-as-bopanna-sits-till-640-pm

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback