Breaking News

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம்

அட்மின் மீடியா
0

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம்
 
 
 
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம், மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி, தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. 
 
இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்களை நிறுவவும் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
 
இதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
 
இந்த சிறப்பு தொழில் முகாமில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை மற்றும் மாநில முதலீட்டு மானியமாக 25 சதவீத எந்திரங்களின் மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். 
 
நீட்ஸ் திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.இந்த அரிய வாய்ப்பை புதிய தொழில்முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி, தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ளது, ஆகையால் தொழில் தொடங்க உங்கள் பகுதியில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback