Breaking News

ஆசிரியர்கள் மாணவர்கள் தமிழில் கையெழுத்து போடும் போது இனிஷியலையும் தமிழில் போட வேண்டும்! பள்ளி கல்விதுறை உத்தரவு

அட்மின் மீடியா
0

பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களின் பெயரை தமிழில் எழுதும் பொழுது முதலில் எழுதப்படும் தந்தை அல்லது தாய் பெயரின் தலைப்பு எழுத்தை தமிழில் எழுத வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.


பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் தமிழில் தங்கள் பெயரை எழுதும்போது முதலில் தலைப்பு எழுத்து எனப்படும் initial முதலில் ஆங்கிலத்தில் எழுதி விட்டு பெயரை தமிழில் எழுதி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள உத்தரவில், 


ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இடவேண்டும்அனைத்து பதிவுகளிலும் பெயர்களை தமிழில் பராமரிக்கவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் தமிழக அரசு ஆணையை சுட்டிக்காட்டி கல்வி ஆணையர் அறிவுறுத்தல்


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback