சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகள் கொண்ட கேப்சூல் ரூம்கள் தூங்கும் இடம்.முழு விபரம் உள்ளே
சென்னை விமான நிலையத்தில் புதிய வசதியாக பயணிகள் தங்கும் ஓர் தனியறை உருவாக்கப்பட்டுள்ளது. அதனை ஸ்லீப்பிங் பாட்ஸ் (sleeping pods) என குறிப்பிடுகின்றனர்.இந்த ஸ்லீப்பிங் ஸ்பாட் வசதி பேக்கேஜ் பெல்ட் எண் 1க்கு அருகில் உள்ளது. அதில் ,புத்தகங்கள் வாசிபதற்கு விளக்குகள், சார்ஜ் போடும் இடங்கள், USB சார்ஜர், லக்கேஜ் வைக்கும் இடம், சுற்றிபார்ப்பதற்கு இடம் என அனைத்தும் இருக்கிது.இதனை பயன்படுத்த ஒரு மணி நேர வாடகை வீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ‘Sleepzo’ என்ற குறைந்த நேரத்திற்கு ஓய்வு எடுக்கும் அறையை அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் விமானங்களில் பயணிப்பவர்கள் ,பிற நகரங்களுக்கு செல்வதற்காக காத்திருக்கும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒய்வு எடுக்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கொண்ட படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த அதிநவீன வசதி சோதனை அடிப்படையில் 4 படுக்கைகள் கொண்ட கேப்சூல் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரம் ஓய்வெடுக்க படுக்கை வசதி தேவைப்படும் பயணிகள் ஆன்லைன் முலம் முன்பதிவு செய்ய வேண்டும்.இவை 'கேப்சூல்' அறைகள் என அழைக்கப்படுகின்றன. இதில் ஒரு அறையில் பெரியவர் ஒருவரும், 12 வயதுக்கு கீழே உள்ள குழந்தை ஒன்றும் தங்கிக் கொள்ளலாம்.
இந்த ஸ்லீப்சோ படுக்கை அறைக்குள் பயணிகளின் லக்கேஜ் வைக்கும் இடம், ஃபோன் சார்ஜ் செய்யும் வசதி, புத்தகம் வாசிப்பதறகான மின் விளக்கு வசதி, ஏசியின் அளவை அதிகரிப்பது/ குறைப்பதற்கான வசதிகள் உள்ளிட்டவைகள் உள்ளன.
முன்பதிவு செய்ய:-
https://www.aai.aero/en/airports/passenger-info/chennai/Conveniences
Tags: தமிழக செய்திகள்

.jpg)
