Breaking News

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் தயாரிப்பு நிறுத்தம் ஏன் தெரியுமா?? முழு விவரம்

அட்மின் மீடியா
0

 உலகம் முழுவதும் அடுத்தாண்டு முதல் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய ஆஸ்பெடாஸ் என்ற கனிம பொருள் கலந்திருப்பதாக சில ஆண்டுகளாக தொடர்ந்து குற்ற சாட்டு வைக்கப்பட்டு வந்தது.மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகின்றது.இந்நிலையில்  ஜான்சன் அன்ட் ஜான்சனின் பேபி பவுடர் 2023ம் ஆண்டில் இருந்து உலகளவில் விற்பனை செய்வதை நிறுத்தும் என்று அறிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடரை விற்பனை செய்து வருகிறது. 

இந்நிலையில், டால்கம் பவுடரில் பயன்படுத்தப்படும் ஆஸ்பெடாஸ் காரணமாக குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா மற்றும் கனடாவில் அந்நிறுவனத்துக்கு எதிராக  38,000 க்கும் அதிகமான வழக்குகள் உள்ளது.2020ம் ஆண்டிலேயே ஜான்சன் அண்ட் ஜான்சன் தனது பேபி டால்க் பவுடனை அமெரிக்காவிலும், கனடாவிலும் விற்பனை செய்வதை நிறுத்தியது.

இந்நிலையில் ஜான்சன் அண்டு ஜான்சன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: -

உலகளாவிய சந்தையில் சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடருக்கு மாறுவதற்கான வணிக முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். 

எங்கள் வணிக தயாரிப்புகளை நீண்டகால வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தி வருகிறோம். இந்த மாற்றம் எங்கள் தயாரிப்புகள் எளிமையாகவும், விரைந்தும் தொடர்ந்து உலகளாவிய நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்ய உதவும்.டால்க் அடிப்படையிலான ஜான்சன் பேபி பவுடர் 2023 ம்ஆண்டு முதல் உலகம் முழுவதும் நிறுத்தப்படுகின்றது என தெரிவித்துள்ளது

அதாவது டால்கம் பவுடர்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் பேபி பவுடர் விற்பனையை ஜான்சன் நிறுவனம் நிறுத்திக் கொள்ள உள்ளது. அதற்குப் பதிலாக சோள மாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பேபி பவுடரில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் அதிகாரபூர்வ அறிவிப்பு படிக்க:-

https://www.jnj.com/johnson-johnson-consumer-health-to-transition-global-baby-powder-portfolio-to-cornstarch

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback