Breaking News

சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி!

அட்மின் மீடியா
0

சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 


தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் 12ம் தேதி முதல் 15 ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு உணவு திருவிழா நடத்தப்படுகிறது. 

சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் உணவு திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை. என சர்ச்சை எழுந்தது மேலும்  பீஃப்பிரியாணி அரங்குகள் அமைக்க விற்பனையாளர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்காததால் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று விளக்கம் அளித்திருந்தார்

இந்நிலையில் சென்னை தீவு திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் மூன்று பீப் கடைகளுக்கு சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. இன்று முதல் சுக்குபாய் பிரியாணி அரங்கில் பீப் பிரியாணி விற்பனை செய்யப்பட உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback