குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றமா- ரயில்வே அமைச்சகம் விளக்கம்
குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம் இல்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பான விதியை, இந்திய ரயில்வே மாற்றியுள்ளதாக சமீப காலமாக சில ஊடகங்களில் செய்திகள் வந்தன. அவற்றில் உண்மை இல்லை.
ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் இந்திய ரயில்வே எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. 5 வயது வரையிலானோர் ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்க தேவையில்லை. அதே சமயம், அவர்களுக்கு தனியாக 'பெர்த்' தேவைப்படும் பட்சத்தில், வயது வந்தோருக்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்
