கல்லூரியில் இடையில் நின்றால் முழு கட்டணத்தையும் திரும்ப அளிக்கவேண்டும்- யுஜிசி உத்தரவு
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான சியுஇடி தேர்வானது ஆகஸ்ட் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தேர்வின் முடிவுகள் வெளியாக 15 நாட்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் வேறு கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வேறு கல்லூரிக்கு மாற விரும்பினால் மாறிக் கொள்ளலாம் என்றும் அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை முழுமையாக திருப்பி தர வேண்டும் என்றும் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது .
மேலும், சேர்க்கையை ரத்து செய்த மாணவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் எனவும் சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என யுஜிசி கேட்டுக்கொண்டுள்ளது.
கல்லூரி மாணவிகள்கல்லூரிகள், பல்கலைக்ழகங்களில் அக்டோபர் 31-ம் தேதி வரையில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
.jpg)