மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் மீது நேற்று செருப்பு வீச்சு சம்பவம் நடந்துள்ள நிலையில் இரவில் அவரிடம் நேரில் சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
மதுரையில் பிரபல மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் சரவணன் சில திரைப்படங்களில் நடித்து வந்தவர், மதிமுகவில் நீண்ட காலம் இருந்து வந்தார். திடீரென்று மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதை அடுத்து நடந்த மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டாக்டர் சரவணன் திமுக சார்பில் போட்டியிட்டு திமுக எம்எல்ஏ ஆனார். அதன் பின்னர் அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட மீண்டும் திமுக வாய்ப்பு வழங்காததால் அந்த அதிருப்தியில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் நேற்று மறைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்திற்கு அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு பிடிஆர் திரும்பும் போது அவர் காரை வழிமறித்து பாஜகவினர் அவர் காரின் மீது செருப்பு வீசினர்.
இந்நிலையில் நேற்று திடீரென்று அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட்டு பாஜகவில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்திருக்கிறார்.எனக்கு வெறுப்பு அரசியல் மத அரசியல் ஒத்துவரவில்லை. என் மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் சொல்லி நான் பாஜக கட்சியில் தொடரவில்லை. பாஜகவில் நான் தொடர போவதில்லை. ராஜினாமா கடிதத்தை கொடுத்து சுயமரியாதை உடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
வீடியோ பார்க்க:-
Tags: தமிழக செய்திகள்
