மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா – முழு விவரங்கள்...
அட்மின் மீடியா
0
சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெற உள்ளதை அடுத்து மாமல்லபுரம் மீண்டும் களைக்கட்ட தொடங்கியுள்ளது.வரும் 13 ஆம் தேதி தொடங்கும் இந்த காற்றாடி திருவிழா, 15 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கோலாகலமாக நடைப்பெற உள்ளது. வழக்கமாக, காற்றாடி திருவிழா, குஜராத், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலேயே நடத்தப்பட்டு வந்தது. செஸ் ஒலிம்பியாட்டியை வெற்றிகரமாக தமிழக அரசு நடத்தியதால், தற்போது முதல்முறையாக சர்வதேச காற்றாடி திருவிழாவும் தமிழகத்தில் நடைபெறவுள்ளது
தமிழ்நாடு சர்வதேச பிரமாண்ட காத்தாடி திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா போன்ற 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் குழுக்கள் பங்கேற்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு உணவுக் கடைகள், விளையாட்டுகள், பட்டம் தயாரிப்பது குறித்த பட்டறைகள், குழந்தைகளுக்கான போட்டிகள் மற்றும் மாலையில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளன.
20 அடி உயரம் முதல் மூன்றடி சிறிய ரகம் காத்தாடிகள் வரை இந்த நிகழ்வில் இடம்பெறுகின்றன. வெவ்வேறு நாடுகள் தங்கள் காத்தாடிகளை அவர்களின் நுணுக்கம் மற்றும் நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்க வெவ்வேறு வழிகளைக் கையாளுகிறார்கள். எனவே, வித விதமான, பல வண்ணங்களில், பல வடிவங்களில் வானத்தை ஆயிரக்கணக்கான காத்தாடிகள் அலங்கரிப்பதை நாம் கண்டு களிக்கலாம்
முதல்முறையாக மகாபலிபுரத்தில் நடைபெறுகின்ற சர்வதேச காத்தாடி திருவிழா தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் இணைந்து குளோபல் மீடியா பாக்ஸின் நிறுவனர் பெனடிக்ட் சாவியோ இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்.
காத்தாடி திருவிழா நடைபெறும் இடம்:-
மகாபலிபுரத்தில் உள்ள TTDC ஓஷன் வியூவில் நடைபெறுகிறது.
கூகுள் மேப் லின்ங்:- https://goo.gl/maps/oHEUUYASM2bfLXWw5
காத்தாடி திருவிழா நடைபெறும் நாள்:-
ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கும் இந்த திருவிழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடையும் மூன்று நாள் நிகழ்ச்சியாகும்.
கட்டணம் எவ்வளவு:-
குழந்தைகள் திருவிழாவைப் பார்வையிடுவதற்கான கட்டணம் இலவசம், பெரியவர்கள் மட்டும் ரூ. 150 செலுத்தி டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
காத்தாடி திருவிழாவைப் பற்றி மேலும் விவரங்கள் அறிய
டிக்கெட்டுகள் ஆன்லைன் புக் செய்ய:-
Tags: தமிழக செய்திகள்
.jpg)