Breaking News

பெண்கள், குழந்தைகள் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை- மாவட்ட ஆட்சியர் தகவல்!

அட்மின் மீடியா
0

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் அனைத்து கல்வி மற்றும் கல்வி சாரா அமைப்புகள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகளை சமூகநலத்துறையின் மூலம் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் 2014-ன் கீழ் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்லூரிகள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனி நபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் http://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலை இணைத்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு சட்டப்பிரிவின் பிடி 2 ஆண்டு காலம் வரை சிறைத்தண்டனை விதிப்பதுடன், உரிமம் ரத்து செய்யப்படும், அபராதமும் விதிக்கப்படும். பதிவு செய்யப்படாத விடுதிகள், இல்லங்கள் பதிவு உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமுகநல அலுவலக தொலைபேசி எண் - 04567 230466-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும், 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 31.08.2022.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback