டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால் இன்சூரன்ஸ் வழங்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால் இன்சூரன்ஸ் வழங்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும்போது உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என ஆராய வேண்டும். அப்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க கூடாது என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவள்ளூர் சென்னேரி அருகே இருசக்கர வாகனம் மோதி தினேஷ்குமார் என்பவர் உயிரிழந்தார் இழப்பீடு கோரி தினேஷ்குமாரின் பெற்றோர் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை நீதிபதி சந்திரசேகரன் அவர்கள் விசாரித்தார்.
அதில் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்றாலும், மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரர்களுக்கு 64 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி அடிப்படையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் இன்சூரன்ஸ் செய்யும்போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம் பார்க்க வேண்டும் எனவும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்க கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
