Breaking News

18 வயது தேவையில்லை..பருவமடைந்த முஸ்லீம் பெண் பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்யலாம் – டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அட்மின் மீடியா
0

இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின்படி பருவமடைந்த பெண் பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளலாம்” என்றும், மைனராக இருந்தாலும் கூட கணவருடன் வசிக்க உரிமை உண்டு என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 


பெண்ணின் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக கடந்த மார்ச் 11 ஆம் தேதி முஸ்லிம் ஜோடி திருமணம் செய்துகொண்டனர்.இந்த வழக்கை விசாரனை செய்த டெல்லி உயர்நீதிமன்றம் சர் டின்ஷா பர்துன்ஜி முல்லாவின் முகமதிய சட்டத்தின் கோட்பாடுகள்’ என்ற புத்தகத்தை குறிப்பிட்டுமுகமதியச் சட்டத்தின்படி, பருவ வயதை அடைந்த பெண் தன் பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும், அவள் 18 வயதுக்குக் குறைவாக இருந்தாலும் கணவனுடன் வசிக்க உரிமை உண்டு என்பதும் தெளிவாகிறது,என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்

மேலும் ஓரு பெண் திருமணம் செய்து அவருடன் மகிழ்ச்சியாக இருந்தால், அவரது தனிப்பட்ட இடத்தில் நுழைந்து தம்பதியரை பிரிக்க, அரசுக்கு இடமில்லை என்றும்  அப்படி செய்வது அரசு தனிப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பதற்குச் சமம்” என்று நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளார்.


நீதிமன்ற உத்தரவை பார்க்க:-

 

https://www.livelaw.in/news-updates/muslim-law-minor-girl-can-marry-without-parents-consent-after-attaining-puberty-has-right-to-reside-with-husband-even-when-less-than-18-yrs-delhi-hc-207216

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback