8 யூடியூப் சேனல்களுக்கு தடை மத்திய அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பாக தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பியதற்காக 8 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் இன்று தடை செய்துள்ளது
போலி செய்திகளை பரப்பியதற்காக ஏழு இந்திய யூடியூப் சேனல்கள், ஒரு
பாகிஸ்தானிய யூடியூப் சேனல், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் இரண்டு பேஸ்புக்
பதிவுகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்:-
மக்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் வகையில் Youtube Channel ஒன்று, பேஸ்புக் கணக்கு, 2 பேஸ்புக் போஸ்ட் ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2021 இன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆகஸ்ட் 16 அன்று அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த 8 யூடியூப் சேனல்களில் 114 கோடி Views மற்றும் 85 லட்சம் Subscribers உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரிலிருந்து இதுவரை 102 Youtube Channel , நியூஸ் சேனல்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்