நீட் தேர்வு முடிவுகள் செப் 7 ஆம் தேதி வெளியீடு!! நீட் தேர்வு முகமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மட்டுமின்றி ஆயுர்வேதா, சித்தா படிப்புகள், யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நீட் தேர்வுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மாதம் 17ம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாகும்’’ என்று நீட் தேர்வு முகமை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
மேலும் குறியீட்டு விடைத்தாள் வரும் 30-ம்தேதி வெளியாகும் என்றும் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை http://neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்
Tags: கல்வி செய்திகள்
.jpg)