Breaking News

மாணவிகளுக்கு மாதந்தோறும் 7-ஆம் தேதி ரூ 1000 உதவித்தொகை வழங்கப்படும் தமிழக அரசு !

அட்மின் மீடியா
0

தமிழக சட்டப்பேரவையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 



அதன்படி, அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு என்று இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை அரசு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் எனஅரிவிக்கப்பட்டு இருந்தது

இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியான மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மேலும், மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7-ஆம் தேதி ரூ.1000 வழங்கவும் முடிவு செய்துள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்ட உதவி நிதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது தமிழக அரசு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback