Breaking News

5 முறைக்கு மேல் ஏடிஎமில் பணம் எடுக்க சேவைக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

அட்மின் மீடியா
0

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம்மில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. 



அதற்கு மேல் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களிடமிருந்து அதற்கான கூடுதல் கட்டணமாக பணப்பரிவர்தனைக்கு 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

இன்று முதல் ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

அதேசமயம் பிற ஏடிஎம்மில் இருந்து மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் இக்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback