அடுத்த 4 நாட்கள் கனமழை பெய்யும் மாவட்டங்கள் இதுதான் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு
தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிவிப்பில்:-
27-ம் தேதி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும்,
நாளை 28-ம் தேதி நாளை நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
29-ம் தேதி நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களிலும்,
30-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை:-
Tags: தமிழக செய்திகள்
