Breaking News

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ 4 உயர்வு !! இன்று முதல் அமல்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது.



தமிழகத்தில் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தனியார் பால் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. 

பால் விலை உயர்வு காரணமாக பால் சார்ந்த இதர பொருட்களும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான இந்த முடிவை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பால் விலை உயர்வை வரைமுறைப்படுத்த பாலுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback