மீன் வளர்ப்புக்கு அரசு மானியம் ரூ4,20,000/- முழு விவரம்....
மத்திய அரசு பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ், மீன் வளர்ப்பாளர்களுக்கு பயிற்சியுடன், மீன் வளர்ப்புக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.
மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் மீன் பண்ணையாளர்கள் குளத்தை மேம்படுத்தி மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். அத்தகைய குளங்களுக்கும், செலவினத்திற்கு ஏற்ப, மத்திய, மாநில அரசு மானியம் வழங்குகிறது.
புதிய மீன் குளம் அமைத்து மீன் வளர்ப்பு செய்ய ஒரு எக்டேரில் ரூ.7 லட்சம் செலவு செய்து மீன் குளம் அமைக்க 60 சதவீத மானியமாக ரூ.4லட்சத்து 20 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் இந்த திட்டத்திற்க்கு உங்கள் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலன் இயக்குனர் அலுவலகம் சென்று மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
Tags: தொழில் வாய்ப்பு

