Breaking News

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் தமிழக வீரர் உட்பட 3 பேர் வீரமரணம்

அட்மின் மீடியா
0

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் தமிழக வீரர் உட்பட 3 பேர் வீரமரணம்

 


ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லஷ்மணன் வீர மரணமடைந்தார். பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்த முயன்ற 2 பயங்கரவாதிகளும் இறந்தனர்

 ஜம்மு - காஷ்மீர் அருகே உள்ள ரஜௌரி மாவட்டத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராணுவ முகாமில் இன்று அதிகாலை புகுந்த பயங்கரவாதிகள் தற்கொலைப் படையினர் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் உயிரிழந்துள்ள ராணுவ வீரர் லட்சுமணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback