அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அட்மின் மீடியா
0
அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்! அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31% இல் இருந்து 34% ஆக உயர்வு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
75-வது சுதந்திரத் தின திருநாளையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண இந்திய தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன் பின்னர் ஆற்றிய உரையில்..
மகிழ்ச்சியான அறிவிப்பை இந்த இனிய தருணத்தில் வெளியிட விரும்புகிறேன். ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும்"என்று அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்

