சென்னையில் 3 நாட்களுக்கு உணவுத் திருவிழா! எங்கு நடக்குது தெரியுமா
அட்மின் மீடியா
0
சென்னையில் ஆகஸ்ட் 12,13,14 ஆகிய மூன்று தினங்கள் சென்னை தீவுத்திடலில் மாநில அளவிலான பிரம்மாண்ட உணவுத்திருவிழா நடைபெற உள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை சார்பில், ஆகஸ்ட் 12,13,14 ஆகிய மூன்று தினங்கள் சென்னை தீவுத்திடலில் மாநில அளவிலான பிரம்மாண்ட உணவுத்திருவிழா நடைபெற உள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் உணவு திருவிழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரைகலைஞர்கள், முக்கிய பிரபலங்களை விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய உணவு வகைகளை கொண்ட 150 அரங்குகள் உட்பட 200 அமைக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
