3700 கிலோ வெடி மருந்து -40 மாடிகளை கொண்ட பிரமாண்ட இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடம் இடித்து தரைமட்டமாக்க தயார் நிலையில் முழு விவரம்
உத்தர பிரதேச மாநிலம், கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 40 மாடிகளை உடைய இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடங்களை ஆகஸ்ட் மாதம் 28க்குள் இடித்து தரைமட்டமாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நொய்டாவில் உள்ள சூப்பர்டெக் என்ற தனியார் கட்டிட நிறுவனம், 40 மாடிகளை உடைய, எமரால்டு கோர்ட் என்ற இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது. இந்த கட்டிடத்தில் 915 வீடுகள், 21 கடைகள் கட்டப்பட்டன.
40 மாடிகளை கொண்ட இந்த இரட்டை கோபுர கட்டிடம் கடுமையான விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது என தெரியவந்ததை அடுத்து விதிகளை மீறி கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை இடிக்குமாறு 2014-ம் ஆண்டு அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் எம்ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2021 ம் ஆண்டு கட்டிடத்தை இடிக்க உத்தவிட்டு தீர்பளித்தார்கள்
அந்த தீர்ப்பில்
இந்த கட்டிடத்தில் வீடு வாங்க பணம் செலுத்தியவர்கள் அனைவருக்கும் 2 மாதங்களில் அவர்கள் செலுத்திய தொகையை திரும்ப அளிக்க வேண்டும்.
மூன்று மாதங்களில் கட்டிடம் இடிக்கப்பட வேண்டும்.
இடிப்பதற்கு ஆகும் செலவை சூப்பர்டெக் நிறுவனம் ஏற்க வேண்டும்.
விதிகளை மீறி கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கின்றனர். இதை உயர் நீதிமன்றம் சரியாக கண்டுபிடித்து அத்தகைய விதிமீறல் கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டு தீர்ப்பளித்து வருகிறது. அந்த வகையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லுபடியாகும்.
இரண்டு கோபுரங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய தொலைவைக் கூட நொய்டா அதிகாரிகள் சரியாக கணிக்கவில்லை. தீ தடுப்பு விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. என கூறியிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி ஆகஸ்ட் 28-ஆம் தேதி சுமார் 3700 கிலோ வெடி மருந்துகளை பயன்படுத்தி 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடம் தகர்க்கப்பட உள்ளது.இதை வெடிவைத்து தகர்க்கும் பணி எடிபைஸ் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் மதியம் சரியாக 2.30 மணிக்கு தகர்ப்பு நடைபெற உள்ள நிலையில் நொய்டா விரைவுச்சாலை பகுதியில் 2.15 முதல் 2.45 மணி வரை முழுமையாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் காலை 7 மணிக்கு முன்பாக அங்கிருந்து வெளியேறியிருக்கவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்
