37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் தூங்கிய விமானிகள்..!! அடுத்து நடந்தது என்ன ?
சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்குச் சென்ற ET343 விமானத்தில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த இரண்டு விமானிகள் தூங்கியதால் அவர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கத் தவறிவிட்டனர்.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 15 அன்று (திங்கள் கிழமை) நடைபெற்றுள்ளது.விமானம் விமான நிலையத்தை அணுகியபோது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிகள் தரையிறங்குவதற்கான சிக்னல்களை அனுப்பியுள்ளனர். ஆனால் விமானம் தரையிறங்கத் தொடங்கவில்லை. விமானிகள் தூங்கிவிட்ட நிலையில், போயிங் 737-ன் தன்னியக்க பைலட் (Auto Pilot) அமைப்பு விமானத்தை 37,000 அடி உயரத்தில் நிலையாக பறக்க வைத்துள்ளது.
இதனால், விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்தை கடந்து சென்றது. இதைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ஏடிசி) அதிகாரிகள், விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், இதில் பலன் கிடைக்கவில்லை.சிறிது நேரத்தில் விமானத்தின் தானியங்கி இயக்கம் நின்று அலாரம் ஒலித்து இருக்கிறது. இந்த சத்தத்தை கேட்டபின்னர் விமானிகள் தூக்கத்தில் இருந்து விழத்ததாக ஏவியேஷன் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
பின்னர் 25 நிமிடங்களுக்குப் பிறகு விமானிகள் ஓடுபாதையில் விமானத்தை முறையாக தரையிறங்கினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
https://twitter.com/AlexInAir/status/1560386182055428097
Tags: வெளிநாட்டு செய்திகள்
