Breaking News

கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததா - டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

அட்மின் மீடியா
0

 கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததா - டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்


திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு இருப்பதாகவும், கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைக் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த கொலைகள் அனைத்தும் ஏதோ எதிர்பாராதவிதமாக நடந்ததாகத் தெரியவில்லை என்றும் முன் விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் இக்கொலைகள் நடந்துள்ளன என்று செய்திகள் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள காவல்துறை, 15 கொலை நடக்கவில்லை என விளக்கமளித்துள்ளது. 

இதுதொடர்பான அறிக்கையில், 

கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது . ஆனால் , தமிழ்நாட்டில் 22.08.2022 அன்று 7 கொலைகளும் , 23.08.2022 அன்று 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது . 

சில ஊடகங்களில் பட்டியிலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை . மேலும் பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள் , தனி நபர்களிடையே உள்ள முன் விரோதம் காரணமாக நடந்துள்ளது . 

2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜீலை வரை 940 கொலைகள் நடந்துள்ளன . கடந்த 2021 - ல் இதே காலகட்டத்தில் 925 கொலைகளும் 2019 ஆம் ஆண்டு 1041 கொலைகளும் நிகழ்ந்துள்ளது . 

ஆகவே முந்தைய 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் , இந்தாண்டு , 101 கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback