Breaking News

சவுதியில் அரசுக்கு எதிராக டிவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை முழு விவரம்....

அட்மின் மீடியா
0

சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக டிவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சல்மா அல் செஹாப் வயது 34 என்பவர் டிவிட்டர் மூலம் சவுதி அரசுக்கு எதிரான செய்திகளை பகிர்ந்து வந்துள்ளார். 



டிவிட்டர் மூலம் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க முயன்றதாக சல்மா அல் செஹாப் மீது சவுதி அரசு வழக்கு பதிந்தது. 

சல்மா அல் செஹாப் பல் மருத்துவத்தில் நிபுணர் ஆவார் மேலும் , இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் PhD மாணவர் மற்றும் இளவரசி நூரா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார், அவருக்கு திருமணம் ஆகி  இரண்டு இளம் மகன்கள் உள்ளனர். ஜனவரி 15, 2021 அன்று அவர்  கைது செய்யப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சல்மா அல் செஹாப்புக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback