தமிழகத்தில் +1 பொதுத்தேர்வை ரத்தா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
தமிழகத்தில் +1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் தமிழக அரசுக்கு இல்லை எனவும், ரத்து செய்யப்படவுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு ஆசிரியர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
கூறியதாவது: +1 பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது. நேரடியாக +2 பொதுத்தேர்வை எழுதினால் மாணவர்கள் பல்வேறு சிக்கலைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதாலேயே பள்ளிக்கல்வித் துறை சார்பில் +1 பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. எனவே, இதை ரத்து செய்யும் திட்டம் எதுவும் தமிழக அரசுக்கு இல்லை. இது பொய்யான ஒரு தகவல்.என அவர் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்
