Breaking News

தமிழகத்தில் 18ம் தேதி முதல் மணல் லாரிகள் ஸ்டிரைக்..! வீடு கட்டுவோருக்கு சிக்கல்..

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ம் தேதி முதல் மணல் லாரிகள் ஓடாது என தமிழக அனைத்து எம் சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் அறிவித்துள்ளார்



சாலை விபத்துகளை தடுக்க வேண்டிய காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், வருவாய் துறையினர், சட்டவிதிகளுக்கு மாறாக அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகபாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை அனுமதிக்கின்றனர். இதனால் சாலைகள் மோசமடைந்து, விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.

மத்திய அரசு வாகனங்களுக்கு எப்.சி.யின்போது ஒட்டப்படும் ஒளிரும் பட்டைக்கு 11 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கும் நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை 2 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, அதிக அளவில் கட்டண வசூல் செய்கிறது.

கனிம கொள்ளையை தடுக்க உடனடியாக இணைய வழி கட்டண முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். 

அனுமதி பெறாமல் இயங்கி வரும் 4 ஆயிரம் எம்.சாண்ட் கிரஷர்களை அரசு முறைப்படுத்த வேண்டும்.

சென்னையை சுற்றியுள்ள 8 மாவட்டத்திற்கு ஒரே ஒரு மணல் குவாரி தான் உள்ளது. அதில் வழங்கப்படும் மணல் தரமற்றதாகவும், அளவு குறைவாகவும், விலை உயர்வாகவும் இருக்கிறது. எனவே தரமான மணல் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

எனவே 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளர்கள் மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளூவர்கோட்டத்தில் 18-ந்தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தவும் உள்ளார்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback