Breaking News

15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 2022ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், 
சென்னை தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கும், 

கடலூர் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் அம்பேத்கார் என்பவருக்கும், 

சென்னை அடையாறு போக்குவர்த்துக் காவல் உதவியாளர் சு. சிவராமனுக்கும், 

மதுரை , இ2 மதிச்சியம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வை. பழனியாண்டிக்கும்

தாம்பரம் ஜே-10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இதேபோன்று புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல்துறை அதிகாரிகள் 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback