Breaking News

தென்காசி மாவட்டம் முழுவதும் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

அட்மின் மீடியா
0

இன்று 19.08.2022 முதல் அடுத்து வரும்15 தினங்களுக்கு தென்காசி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 



தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் 20-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி நெற்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.


 

எனவே இச்சமயத்தில் மற்றும் தென்காசி மாவட்டம் முழுமைக்கும் 19.08..2022 அன்று காலை 06.00 மணி முதல் 02.09.2022 அன்று மாலை 06.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144 1மற்றும் 2 தடையுத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது நினைவு தபால் தலையை மத்திய அரசு வெளியிட உள்ளது.

மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வ உத்தரவு 

https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/08/2022081842.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback