Breaking News

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களில் மின்சாரம் வாங்க - விற்க மத்திய அரசு தடை!!

அட்மின் மீடியா
0

13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க மத்திய அரசு நள்ளிரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.



தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள், பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை பகிர்ந்துகொள்ள நேற்று 18.08.2022 இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

பாக்கி தொகை செலுத்தாததால்,தமிழ்நாடு, தெலுங்கானா, மத்திய பிரேதசம்., மிசோரம், ஜார்க்கண்ட், பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 13 மாநிலங்கள் ஆகஸ்ட் 19 முதல் மின்சார வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மின்சாரம் விநியோக நிறுவனங்கள் மற்றும் மின்சாரம் உற்பத்தி நிறுவனங்கள் நிலுவைத் தொகையை செலுத்தாததற்காக மின் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட விதிகளின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய லேட் பேமென்ட் சர்சார்ஜ் விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 19 முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். என தெரிகின்றது

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback