12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ10000/- இலவச லேப்டாப் வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு படிக்கலாம் - முழு விவரம்
12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாதம் 10000/- சம்பளம், இலவச லேப்டாப் வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு படிக்கலாம் - முழு விவரம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மற்றும் HCL நிறுவனம் இணைந்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்க உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தாட்கோ, HCL நிறுவனம் இணைந்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் இணைய வழி மூலம் பயிற்சி வழங்கப்படும். இதற்கு தேவையான மடிக்கணினியை HCL நிறுவனமே வழங்கும்.
பின்னர், சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா உள்ளிட்ட நகரங்களில் உள்ள அந்நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். அப்போது, ஊக்கத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.
மேலும் இரண்டாம் ஆண்டில் HCL நிறுவனத்தில் திறமைக்கு ஏற்ப லட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை வழங்கப்படும்
கூடவே இந்தியாவின் மதிப்புமிக்க பிட்ஸ் பிளானி, சாஸ்தரா, அமிட்டி பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பு படிக்க வசதி செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமாகிய தாட்கோவே கடனாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க:-
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு
