குடும்பதலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் முதல்வர் ரங்கசாமிஅறிவிப்பு
அட்மின் மீடியா
0
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் புதுசேரி முதல்வர் ரங்கசாமி
இந்நிலையில் மத்திய அரசு புதுவை நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக ரூ.10,700கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி சட்டசபை இன்று காலை கூடியது . நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில்
புதுச்சேரியில் 21-57 வயதுக்குட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத குடும்ப பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.
காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும்
மாநிலத்தில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும்
வாடகை இடங்களில் செயல்படும் நூலகங்கள் அரசு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்படும்
சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும்
காரைக்காலில் இருந்து இலங்கைக்கு பயணிகள், சரக்கு கப்பல் சேவை துவங்கும்.
பாரதியார் பல்கலைக்கூடத்தில் ₨16.18 கோடி மதிப்பில் தாகூர் கலை பண்பாட்டு வளாகம் நடப்பாண்டில் கட்டி முடிக்கப்படும்
இந்தாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.
புதுவை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, மகளிர் பொறியியல் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
புதுவையில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
காரைக்காலில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.
Tags: இந்திய செய்திகள்