Breaking News

சென்னை விமான நிலையத்தில் 100 கோடி மதிப்பில் போதை பொருள் கண்டுபிடிப்பு - வீடியோ

அட்மின் மீடியா
0

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் நேற்று எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இக்பால் பாஷா (35) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். 



சுற்றுலா விசாவில் எத்தியோப்பியா சென்றுவிட்டு சென்னை வந்ததாக அவர் கூறினார்.மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்தனர். 

 

அப்போது அவர் அணிந்திருந்த உடைகள், உள்ளாடை, ரகசியப்பை அறை மற்றும் காலணிகள் என்று பல்வேறு இடங்களிலிருந்து மொத்தம் 9 கிலோ 590 கிராம் எடையுடைய கொக்கைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருள்களை கைப்பற்றினர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூபாய் 100 கோடி. ஆகும்

அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் இந்த ரூ.100 கோடி மதிப்புடைய போதை பொருளை இந்தியாவுக்கு கொண்டு வந்து, எங்கெங்கெல்லாம் கடத்த இருந்தாா். இவர் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Raghuvp99/status/1558132964935868416

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback